திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (11:04 IST)

சினிமா தியேட்டரில் சில்மிஷம் செய்த சித்தப்பா..! – ”குலுகுலு” திரையரங்கில் பரபரப்பு!

புதுச்சேரியில் திரையரங்கில் வைத்து இளம்பெண்ணின் சித்தப்பாவே பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் இளங்கலை பிசியோதெரபி படித்து வந்துள்ளார். இளம்பெண்ணின் பெற்றோர் கூலி வேலை செய்பவர்களாக இருக்கும் நிலையில் இளம்பெண் நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

இளம்பெண்ணி படிப்புக்காக மொபைல் போன் தேவைப்பட்ட நிலையில், பெண்ணின் சித்தப்பா அவருக்கு ஐபோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். பிறகு பெண்ணை படத்திற்கு போகலாம் என்று அழைத்துக் கொண்டு புதுவை – கடலூர் சாலையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் சந்தானம் நடித்த “குலுகுலு” படத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

படம் பார்த்துக் கொண்டிருந்தபோது இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள சித்தப்பா முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூட்டலிட்டுக் கொண்டே ஓடி கழிவறைக்குள் சென்று தாழிட்டு கொண்டு அழுதுள்ளார்.

யார் சொல்லியும் அவர் கதவை திறக்காத நிலையில் போலீஸார் திரையரங்கம் சென்று பெண்ணை சமாதானம் செய்துள்ளனர். இதையடுத்து வெளியே வந்த பெண், தனது சித்தப்பா செய்த சில்மிஷ வேலைகளை சொல்ல, உடனே பெண்ணின் சித்தப்பாவை கைது செய்தனர். மகள் முறை பெண்ணிடம் சித்தப்பாவே தப்பாக நடந்து கொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.