வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (10:30 IST)

வயதுக்கு மீறிய காதல்.. பேச மறுத்ததால் மாணவி மீது தாக்குதல்! – சென்னையில் பரபரப்பு!

Knife
சென்னையில் காதலி தன்னை புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 21 வயது இளம்பெண் ஒருவர் படித்து வந்துள்ளார். இவர் ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த 19 வயதான பிரசாந்த் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் அவர்கள் இளம்பெண்ணை கண்டித்துள்ளனர். அதை தொடர்ந்து இளம்பெண் பிரசாந்துடன் பேசுவது, பழகுவதை தவிர்க்க தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் இளம்பெண் கல்லூரி முடிந்து வந்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் முகத்தில் கீறிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தலைமறைவான இளைஞரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் பிரசாந்த் தானகவே வந்து சரணடைந்துள்ளார். அதை தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.