1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2023 (09:48 IST)

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் தான் காவிரியில் தண்ணீர் வருகிறது - கே.எஸ்.அழகிரி

காவிரி பிரச்சனையை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால்தான் காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அழகிரி பேசியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் தான் காவிரியில் தண்ணீர் வருகிறது. விரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை காங்கிரஸ் கட்சி பெற்றுக் கொடுக்கும்
 
அதிமுக - பாஜக என்பது கொள்கை கூட்டணி இல்லை. ஆனால்,  ‘I.N.D.I.A’ கூட்டணி என்பது மத சார்பற்று நாட்டு வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி’ என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
 
Edited by Siva