1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (14:05 IST)

வாக்குப்பெட்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! – திருவள்ளூரில் பதற்றம்!

திருவள்ளூர் அருகே வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டிக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலையில் தொடங்கிய தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே சமயம் சின்னங்களில் குளறுபடி, கட்சியினர் இடையேயான மோதல் ஆகியவற்றால் பல பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்தில் மக்கள் வாக்களித்து வந்துள்ளனர். அப்போது திடீரென வாக்கு சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் வாக்குப்பெட்டிகளை எடுத்து கொண்டு வெளியே சென்று , அதற்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் அந்த வாக்குசாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாப்பரம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.