1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (13:09 IST)

உள்ளாட்சி தேர்தல்: மீண்டும் வழக்கு போட்ட திமுக!

ஒவ்வொரு முறை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடும் போதெல்லாம் திமுக தரப்பில் இருந்து வழக்கு போடப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு தடங்கல் ஏற்பட்டு வந்தது தெரிந்ததே.  சமீபத்தில்கூட டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டவுடன் திமுக தரப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் பின்னர் அந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு தேர்தல் நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது இன்று முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திமுக தரப்பில் இருந்து இன்று மீண்டும் ஒரு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என திமுக தரப்பில் ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்
 
மேலும் வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் டிசம்பர் 30ம் தேதி விசாரணைக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது