வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (14:09 IST)

நல்ல ’மனநலத்துடன்’ வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் – ஸ்டாலின் டிவிட்டால் களேபரமான டிவிட்டர் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலினின் வாழ்த்து டுவிட் விவாதத்தை எழுப்பியுள்ளது.

தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். தமிழகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர். திரை உலகினரும் அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து செய்தியினை பகிர்ர்ந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டரில் ’70 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல உடல்- மன நலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதில் நல்ல மன நலத்துடன் என்ற வார்த்த இருப்பதைப் பார்த்து ஒரு சிலர் ரஜினியை ஸ்டாலின் கலாய்த்துள்ளதாகவும் ஒரு சிலர் வழக்கமாக பேச்சில்தான் ஸ்டாலின் உளறுவார் இம்முறை எழுத்திலும் உளறியிருக்கிறார் எனவும் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.