செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (11:00 IST)

”நண்பர் ரஜினிக்கு வாழ்த்துகள்”.. ஸ்டாலின் டிவிட்

இன்று நடிகர் ரஜினியின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (12.12.2019) தனது 70 ஆவது வயதை நெறுங்குகிறார். இவருக்கு இந்திய அளவில் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதால், இவரது பிறந்தநாள் ஒரு கொண்டாடமாகவே கடைபிடிக்கப்படுகிறது.

இவரது நற்பணி மன்றங்களும் ரசிகர் மன்றங்களும் இவரது பிறந்தநாளை வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடுவர். தற்போது அரசியலிலும் ஈடுபடப்போவதாக அறிவித்தத்தை அடுத்த திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை சேந்தவர்கள் இவரது கருத்துகளுக்கு விமர்சனமும் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் மனநலத்துடனும், வளத்துடனும் மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் எனவும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.