1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 மே 2021 (13:21 IST)

7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் ஸ்டாலின்!

தமிழகத்தில் தனிபெரும்பாண்மையாக ஆட்சி அமைக்கவுள்ள திமுக 7 ஆம் தேதி ஆளுனர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழாவை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்நிலையில் பதவியேற்பு விழா எப்போது என்பது அனைவரின் கேள்வியாக இருந்த நிலையில் இப்போது வரும் 7 ஆம் தேதி ஸ்டாலின் ஆளுனர் மாளிகையில் மிக எளிமையாக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக நாளை திமுக எம் எல் ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.