திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 மே 2021 (11:09 IST)

நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனை அடுத்து தேசிய தலைவர்களும் தமிழக தலைவர்களும் திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 
 
திமுக மொத்தம் 124 தொகுதிகளில் தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சி அமைப்பதற்கு 118 எம்எல்ஏக்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் தனித்து ஆட்சி அமைக்க உள்ளது என்பது ஒரு சாதனையாகும் 
 
இந்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்றும் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து நாளை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து எம்எல்ஏகளும் கூட உள்ளனர் என்பதும் இந்த கூட்டத்தில் முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலின் மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது