புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2019 (08:24 IST)

கலைஞர் பெயரில் அருங்காட்சியகம் … துரிதமாக நடக்கும் பணிகள்- ஸ்டாலின் கருத்து !

கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிக்குள் அவரது பெயரில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் உள்ள காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மாளின் நினைவிடத்திற்கு நேற்று ஸ்டாலின் வந்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது கலைஞரின் மூத்த மகள் செல்வியும் அவரோடு இருந்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் ’கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து நானும் என்னுடைய தங்கை செல்வியும் ஒரு அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம். அதற்காக ஒரு நிலத்தை இணைந்து வாங்கியுள்ளோம். அதைப் பதிவு செய்வதற்காகதான் இன்று வந்துள்ளோம். கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிக்குள் அவரது பெயரிலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.