1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2019 (12:41 IST)

ஏர்போர்ட் டூ மாமல்லபுரம்: அதிமுக சார்பில் பேனர் வைக்க நீதிமன்றம் அனுமதி!

மக்களுக்கு இடையூறு இன்றி தகுந்த பாதுகாப்புடன் வரவேற்பு பேனர் வைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
 
நேற்று, அதிமுக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக பிராமணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்தது. இந்த பிராமணப் பத்திரத்தில் மோடி - சீன அதிபர் ஜின்பிங் வருகையை முன்னிட்டு பேனர் வைக்க அனுமதி கோரியது. 
 
ஆம், வரும் அக்டோபர் 11, 12 ஆம் தேதிகளில் இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் சென்னைக்கு வரவிருக்கிறார்கள். எனவே சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை, அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மொத்தம் 16 இடங்களில் வரவேற்பு பேனர்களை வைக்க அதிமுக அரசு சார்பில் திட்டமிடப்பட்டது. 
இந்த திட்டத்திற்கு நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அதோடு, சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களுக்கு பாதிப்பின்றி வரவேற்பு பேனர்கள் வைக்க அறிவுறுத்தியுள்ளது. 
 
மேலும் அரசியல் கட்சிகள் பேனர் வைக்கத்தான் தடை, வரவேற்பு பேனர்களை வைக்காலம். உரிய அஸ்திவாரம், பலமான கட்டுமானங்களுடன் பேனர்களை வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.