கொரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு: மம்தா பானர்ஜி கோரிக்கை

mamtha
கொரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு
siva|
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்று 4 லட்சத்திற்கு மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதே ரீதியில் சென்றால் அமெரிக்காவை விட இந்தியா முந்தி விடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக ஆக்ஸிஜனுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ளது தகவலின்படி ஆக்சிஜன் சிலிண்டர், கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்
இதே கோரிக்கையை ஏற்கனவே காங்கிரஸ் உள்பட பல கட்சி தலைவர்கள் வலியுறுத்தி நிலையில் தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது




இதில் மேலும் படிக்கவும் :