1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stalin questions wheather Nilavembu has side effets

நிலவேம்பு கசாயத்தால் பக்கவிளைவா?? ஸ்டாலின் கேள்வி!!

நிலவேம்பு
நிலவேம்பு கசாயத்தால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


 
 
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால்,  இதனை கட்டுப்படுத்த நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.
 
தமிழக அரசும் மாநிலம் முழுவது அங்காங்கே நிலவேம்பு கசாயத்தை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், நிலவேம்பு மலட்டுத்தன்மை போன்ற பக்கவிளைவுகலை ஏற்படுத்தும் என செய்தி வெளியாகியது.  
 
இதனை அடுத்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நிலவேம்பு குடிநீர் பாதுகாப்பானதா? அதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கோரியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதாவின் இந்த செயல்: கண்டு வியந்த முன்னாள் கவர்னர்!!