வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (15:57 IST)

பேருந்துகளின் மூலமாகவே டெங்கு? ; பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் - வீடியோ

கரூர் அருகே அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க-வினர் தீவிரமாக நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணியினை தொடங்கியுள்ளனர். 


 


அ.தி.மு.க அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனின் வேண்டுகோளுக்கிணங்க, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி பேருந்து நிலையம் முன்பு அக்கட்சியின் கரூர் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.பி.லோகநாதன் தலைமையில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணியினை தொடக்கினார்கள். 
 
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பொருளாளர் பி.கே.எஸ்.முரளி, கரூர் நகர செயலாளர் கோல்டுஸ்பாட் ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு அசோக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 
பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. மேலும் ஆம்னி பேருந்துகளினால் தான், டெங்கு கொசுக்கள் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது என்றும், மற்ற மாவட்டங்களில் இருந்தும் வரும் ஆம்னி பேருந்துகளினால் தான் டெங்கு கொசுக்கள் வருகின்றது என்று எம்.பி.காமராஜ் கூறியதற்கு நக்கல் அடிக்கும் பொருட்டு,  அப்பகுதி வழியாக வந்த தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் நிலவேம்பு கசாயமும் கொடுக்கப்பட்டது.

சி. ஆனந்தகுமார்