புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (10:43 IST)

ஸ்டாலினை விட எங்களுக்கு தமிழ்ப்பற்று அதிகம்: தமிழிசை

தமிழ் தமிழ் என்று கூறி வரும் திமுகவினர்களை விட பாஜகவினர்களுக்கு தமிழ் மொழி மீது மிகுந்த பற்று உண்டு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.



 
 
தமிழகத்தில் படிப்படியாக மூன்று மொழி கொள்கையை பாஜக திணிப்பதாகவும், தமிழுக்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் திமுக கடுமையாக எதிர்க்கும் என்றும் சமீபத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 
இதற்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'ஸ்டாலினை விட பாஜகவினருக்கு தமிழ் மொழி மீது மரியாதையும், மதிப்பும் உள்ளது என்றும், ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்றுக் கொடுக்கவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார். 
மேலும் டெங்கு ஒழிப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, 'மத்திய, மாநில அரசுகள் இணைந்து டெங்குவை ஒழிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.