1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 ஜூலை 2018 (10:51 IST)

கவர்னருடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு: காரணம் என்ன?

தமிழக  கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் அவருக்கு கருப்புக்கொடி காண்பித்தனர்
 
இந்த நிலையில் இன்று தமிழக கவர்னரை மு.க.ஸ்டாலின் சந்திக்கின்றார். சற்றுமுன் கவர்னரின் ராஜ்பவன் இல்லத்திற்குள் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். 
 
தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரிச்சோதனை குறித்த உண்மையான தகவல்களை மக்களுக்கு இந்த அரசு தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக கவர்னரை மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக செய்யாதுரை வீட்டில் நடந்த சோதனையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஸ்டாலின் கோரவுள்ளதாக தெரிகிறது.