தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யுங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

stlain
தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யுங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
siva| Last Updated: வியாழன், 13 மே 2021 (15:12 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க என்று வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரத்தை சீரமைக்க ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை மற்றும் சிறப்பு நிதி வழங்கி மாநில கடன் அளவை 4% உயர்த்த வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தனது கடிதத்தில் ’பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் பிற மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படாத நிலையில் கொரோனா தொற்றால் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி உதவி அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் கொரோனா காலத்தில் கூடுதல் செலவினங்களை மேற்கொள்ள தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை மாநிலத்தில் உற்பத்தி மதிப்பில் 3% என்ற அளவில் மேலும் ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்
இதில் மேலும் படிக்கவும் :