1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (12:24 IST)

கேரள முதல்வருக்கு ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து!

pinarayi
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளத்தில் கேரள முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:
 
முதல்வர் ஸ்டாலின்: பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக கேரளாவை வலுப்படுத்தவும், தேசத்தின் ஒற்றுமையில் மாநிலங்களின் வலிமையைக் காட்டவும் வாழ்த்துக்கள்
 
கமல்ஹாசன்: மார்க்சிஸத்தின் தலை மாணாக்கர், அனைவர் நலனையும் அவாவுபவர், கேரள முதல்வர், வயதுக்கு மரியாதையைக் கூட்டுபவர், என் இனிய நண்பர் 
பினரயி விஜயன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து.