திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 25 ஆகஸ்ட் 2018 (15:38 IST)

இதுக்கு என்ன அவசரம்? மு.க.அழகிரி கேள்வி

ஸ்டாலின் அவசர அவசரமாக கட்சி தலைவர் பதவியை ஏற்க செல்கிறார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதன் முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 28ம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
 
செப்டம்பர் 5ஆம் தேதி மு.க.அழகிரி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி கூறியதாவது:- 
 
தாய் கழகமான திமுகவில் நான் சேருவதில் எந்த தவறும் இல்லை. ஸ்டாலின் அவசர அவசரமாக கட்சி தலைவர் பதவியை ஏற்க செல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.