மு.க.ஸ்டாலின் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர்: துரைமுருகன்

durai
Last Modified செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (22:14 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர் என திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

திமுக தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்களை கூட்டணி கட்சி தலைவர்களும், ஆதரவாளர்களும் கடந்த சில நாட்களாக மிகைப்படுத்தி புகழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் திமுகவின் பொருளாளராக பதவியேற்ற துரைமுருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, '55 ஆண்டுகள் கருணாநிதி அவர்களை நிழல் கூட பிரிந்திருக்கலாம், நான் பிரிந்ததில்லை; குடும்பத்தை விட அவரின் அருகில் இருந்த நாட்கள்தான் அதிகம் என்று கூறினார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என்றும் கூறினார்.


MK Stalin
துரைமுருகனின் இந்த பேட்டியை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். முதலில் மு.க.ஸ்டாலின் வரும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஜெயித்து காட்டட்டும் என்றும் அதன்பின்னர் பிரதமரை கைகாட்டுவது குறித்து யோசிக்கலாம் என்றும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :