வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 ஜூன் 2025 (10:24 IST)

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

Gold Chain
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், சென்னையில் இன்று  தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் வருமாறு:
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,295 இருந்தது. ஆனால் இன்று அது ரூ.9,320 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு சவரனின் விலை நேற்று ரூ.74,360 ஆக இருந்த நிலையில், இன்று அது ரூ.74,560ஆக உயர்ந்துள்ளது. 
 
24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது.  நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.10,140 ஆக இருந்தது; இன்று அது ரூ.10,167 ஆகவும், 8 கிராம் (ஒரு சவரன்) விலை ரூ.81,336 ஆகவும் குறைந்துள்ளது.
 
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.120 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றம், ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் போன்ற பல்வேறு காரணங்களே இந்த விலையேற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக மக்கள் கருதுவதால், இதுபோன்ற காலங்களில் தேவை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran