எஸ்.பி வேலுமணி மீது ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு...
எஸ்பி வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக உள்ள நிலையில் அவர் தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து தன் உறவினர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் ஒப்பந்தங்கள் அளித்தது தொடர்பான குற்றச்சாட்டை தக்க ஆதாரங்களுடன் தான் முன் வைத்துள்ளதாகாக ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதனை அடுத்து தி.மு.க.எம்.பி ஆர்.எஸ்.பாரதி ஊழல்தடுப்பு மற்றும் கண்கணிப்புத்துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சுகாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் போன்றோர் மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் லஞ்ச ஊழல் கண்காணிப்புத்துறை தயவு தாட்சன்யம் காட்டி வருகிறது. தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள் அனைத்தும் உள்ளாட்சி துறையின் கீழ் உள்ளதால் அனைத்து ஒப்பந்தங்களும் அமைச்சரின் ஒப்புதலின் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரூ.942 கோடி உபரியாக இருந்த சென்னை மாநராட்சியின் நிதி நிலைமை தற்போது ரூ.2500 கோடி அளவுக்கு கடனில் மூழ்கியுள்ளது.
எஸ்பி. வேலுமணி அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியில்லாதவர். திமு.க சார்பில் ஊழல் குறித்து வழக்கு தொடர்ந்திருப்பதால் அந்த ஊழல் குற்றச்சட்டுகள் மொத்தமும் ஒவ்வொன்றாக விசாரணைக்கு வந்து கொண்டிருப்பதால், இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணை வெளிப்படையாக நடைபெற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவிவிலக வேண்டும்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.