'சர்ச்சை வீடியோ'வுக்கு வருத்தம் தெரிவித்து 'புதிய வீடியோ' வெளியிட்ட மதபோதகர்...
கடந்த 2016 ஆம் வருடம் சென்னையில் ’இயேசு விடுவிக்கிறார்’ ஊழியத்தின் கிருஸ்தவ ஆராதனைக் கூட்டத்தில் அதன் அமைப்பாளர் மோகன் சி. லாசரஸ் இந்துமதக் கடவுள்களை தவறாக விமர்சிப்பது போன்ற வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பு பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைதொடர்ந்து தென் மாவட்டங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு வருத்த தெரிவித்து லாசரஸ் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது.
இந்துக் கடவுள்களையோ, இந்து மதத்தையோ நான் தவறாக உச்சரித்தது இல்லை. என் உடன் பிறந்த சகோதரர்கள் இப்போதும் இந்து மதத்தை தழுவியவர்களாகவே உள்ளனர். எல்லா மதத்தினரையும் ஒரே மதிரியாகவே பாவிக்கிறேன். என் பேச்சைக் கேட்டு இந்து சகோதர - சகோதரிகள் மனம் வருத்தமடைந்திருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.