புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

19 ஆண்டுகளுக்கு ஒரு முறை அபூர்வ நிகழ்வு: ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி தினத்தில் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்றாலும் கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதேசி என்பது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதேசி இன்று வந்துள்ளதை அடுத்து ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உள்ளது. 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ நிகழ்வான கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசி அன்று இறைவனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கூடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கொரோனா வழிபாட்டு முறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது