1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:16 IST)

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு... இதோ புதிய அறிவிப்புகள்!!

தேவஸ்தான துறை அமைச்சர் சபரிமலையில் பக்கர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளார். 

 
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 
 
இந்நிலையில் தேவஸ்தான துறை அமைச்சர் சபரிமலையில் பக்கர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளார். அவை பின்வருமாறு... 
 
1. சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 
2. உடனடி முன்பதிவு மூலமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்க நடவடிக்கை
3. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் அதில் குளிக்க பக்தர்கள் அனுமதி
4. பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு பம்பையில் தங்கி ஓய்வு எடுக்க வசதியாக அங்குள்ள அறைகள் சீரமைக்கப்படும்
5. விரைவில் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படும். 
6. பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கவும் அனுமதி