செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (14:38 IST)

காலி கவருக்கு 1 ஜிபி இலவச டேட்டா: ஜியோவின் அடடே ஆஃபர்...

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதுமையான வகையில் ஆஃபர்களை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது கேட்பரி டெய்ரி மில்க் உடன் இணைந்து 1 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
அதாவது டெய்ரி மில்க் சாக்லெட் ஒன்றை வாங்கி அதன் கவரை புகைப்படம் எடுத்து மை ஜியோ செலலியில் பதிவேற்றி சில வழிமுறைகளை பின்பற்றினால் 1 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும் என அறிவித்துள்ளது.
 
1 ஜிபி இலவச டேட்டா பெற...
 
1. மை ஜியோ செயலியில் ‘Get the tastiest 1GB of data ever' என்ற பேனரை க்ளிக் செய்யவும். 
2. அடுத்து PARTICIPATE NOW எனற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 
3. டெய்ரி மில்க் சாக்லேட் காலி கவரை புகைப்படம் எடுத்து அப்லோடு செய்யவும். 
4. அதன் பின்னர் ‘KEEP 1GB’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 
 
# இவ்வாறு செய்துமுடித்ததும் 1 ஜிபி இலவச டேட்டா 7-8 நாட்களில் உங்களது கணக்கில் கிரெடிட் ஆகும். 
 
# இந்த சலுகையின் மூலம் ஒரு ஜியோ எண்ணிற்கு ஒருமுறை மட்டுமே இலவச டேட்டாவை பெற முடியும். 
 
# இலவச டேட்டா வேண்டாம் என்றால், குழந்தைகளின் டிஜிட்டல் கல்விக்கு உதவ 1 ஜிபி-க்கான கட்டணத்தை வழங்கலாம்.