ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 ஜூலை 2021 (12:35 IST)

எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: ஸ்ரீப்ரியாவின் காட்டமான டுவிட்

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் மற்றும் பத்மபிரியா ஆகிய இருவரும் நேற்று திமுகவில் இணைந்ததை அடுத்து எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஸ்ரீபிரியா தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் சிலர் தேர்தலுக்குப் பின்னர் திடீர் திடீரென விலகினார் என்பது தெரிந்ததே. அவர்களில் டாக்டர் மகேந்திரன் மற்றும் பத்மபிரியா ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் திமுகவில் சேர இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்
 
இந்த நிலையில் இதுகுறித்து நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சட்டையை மாற்றுவது போல் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் சில அரசியல்காரியவாதிகள்
(எதற்கும் எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்…மாற்ற வசதியாக இருக்கும்) என்று கூறியுள்ளார்.