திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2023 (18:36 IST)

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி என்கவுன்ட்டர்.. போலீஸாரை தாக்கி தப்பிக்க முயன்றதால் பரபரப்பு..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீஸாரை தாக்கி தப்பிக்க முயன்ற  ரவுடி என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகண்டியில் ரவுடி விஷ்வா என்பவர் மீது போலீசார் என்கவுன்ட்டர் செய்தார். அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதால் இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
 
மேலும் ரவுடி விஷ்வா  நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் அடைந்ததாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது
 
ரவுடி விஷ்வா மீது  கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள்  நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran