ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:43 IST)

’’விஜய் சேதுபதிக்கு எதிரான பதிவுக்கு’’ ….. ''தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்'' என பார்த்திபன் டுவீட்

விஜய் சேதுபதியின் மகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபர் மீது சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்  விஜய்சேதுபதிக்கு எதிராக சர்ச்சைக்குரிய பதிவிட்ட நபருக்கு எதிராக நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில், க்கிரம் பிடித்தவனை-பிடித்ததனை துண்டுத் துண்டாக நறுக்கி அத்தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான “800” படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் ஈழ எதிர்ப்பு மனநிலை கொண்ட முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

முன்னதாக சிலர் விஜய் சேதுபதியை விலக கோரி வலியுறுத்தி வந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாசமாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் அவதூறாக பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில், விசேஷமான செய்திகளை பரப்புங்கள் வி.சே சம்மந்தப்பட்ட sensitive செய்தி (cybercrime)விசாரிப்பதைக்கூட பகிராமல் ரகசியம் காக்க! ‘வக்ர துண்டாய தீமஹி’-சரியான அர்த்தம் வேறாக இருக்கலாம்.ஆனால் நெஞ்சில் வக்கிரம் பிடித்தவனை-பிடித்ததனை துண்டுத் துண்டாக நறுக்கி அத்தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும் எனப்பதிவிட்டுள்ளார்.