ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (07:26 IST)

தொடர்கதையாகும் தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையால் 32 பேர் கைது..!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகிறது என்பதும் இந்த தொடர் கைதுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தாலும் கைது நடவடிக்கை என்பது தொடர்கதை ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வெவ்வேறு இடங்களில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதாகவும் கைதான 32 மீனவர்கள் இருந்த ஐந்து படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க திட்டமிட்டு இருந்ததாகவும் அதன் பிறகு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 32 மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Edited by Siva