செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (10:37 IST)

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார் சீமான்: இலங்கை தமிழ் எம்பி கண்டனம்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என திரும்ப திரும்ப கூறி வரும் சீமான், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார் என இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன் சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்தார். அங்கு அவர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை சந்தித்து பேசினார். அதன்பிம் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘பலவிதமான வேதனையில் உள்ள ஈழ தமிழர்களுக்கு எதிராக இங்குள்ளவர்கள் தேவையற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக விடுதலை புலிகள் தான் ராஜீவ் காந்தியை கொன்றனர் என்ற சீமானின் கருத்து ஈழ தமிழர்களுக்கு செய்யும் துரோகம்’ என்று கூறினார்.
 
இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன் அவர்களின் இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.