ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 நவம்பர் 2024 (10:07 IST)

சபரிமலையில் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதி! எங்கெங்கு தெரியுமா?

சபரிமலையில் மகரவிளக்கு, மண்டல பூஜையையொட்டி பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால் நேரடி புக்கிங் வசதி மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரவிளக்கு, மண்டல பூஜை சீசனில் லட்சக்கணக்கான பக்தர்களை மாலை அணிந்து வந்து ஐயப்ப தரிசனம் செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக கொரோனா காரணமாக ஐயப்ப பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஐயப்பன் கோவிலுக்கு வருவது கட்டாயமாக்கப்பட்டது.

 

அதன்பின்னர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆன்லைன் புக்கிங்கும், அதிகமான கூட்ட நேரங்களில் குறிப்பிட்ட அளவு நேரடி புக்கிங் வசதியும் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் இந்த மகரவிளக்கு சீசனுக்கும் நேரடி ஸ்பாட் புக்கிங் வசதி மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
 

 

சபரிமலையின் பம்பை, எருமேலி மற்றும் பீர்மேடு ஆகிய பகுதிகளில் நேரடி முன்பதிவு செய்யலாம். ஒருநாளைக்கு நேரடி புக்கிங் மூலம் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K