1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (08:08 IST)

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

சபரிமலையில் இந்த ஆண்டு, இணையதள வழியாக பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே மண்டல மற்றும் மகர பூஜை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
 
கேரளாவில் உள்ள சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்க உள்ளது, இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில், நடப்பாண்டு பூஜை காலத்தில், இணையத்தின் மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தினமும் அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும் என்றும், இணைய முன்பதிவின்போது யாத்திரை பாதையை தேர்வு செய்யும் வாய்ப்பு பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
எனவே, இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள், இணையத்தின் மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
 
Edited by Siva