1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 மே 2022 (15:37 IST)

ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன 138 கிலோ இறைச்சி!

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சவர்மா கடைகளில் ரெய்டு நடந்து வருகிறது.

 
சமீபத்தில் கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் கடை ஒன்றில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சவர்மா கடைகளில் ரெய்டு நடந்து வருகிறது.
 
அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், பால் பண்ணை, காட்டூர், துவாக்குடி, முசிறி, மணப்பாறை பகுதிகளில் உள்ள ஷவர்மா விற்பனை செய்யும் அசைவ கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 
 
அப்போது 47 கடைகளில் காலாவதியான இறைச்சிகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை செய்த போது அவை அனைத்தும் கெட்டுப்போனது என்பது தெரிய வந்தது. மேலும் திருச்சியில் ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன 138 கிலோ இறைச்சிகள் அழிக்கப்பட்டன.