பிரேம்ஜி பட தயாரிப்பாளருக்கு மிரட்டல் விடுத்தாரா அன்புச்செழியன் சகோதரர்
கங்கை அமரன் மகனும், இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி அமரன் நாயகனாக நடித்த படம் 'மாங்கா', இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றதாக கூறப்படும் அன்புச்செழியனின் சகோதரர் நிறுவனமான சுஷ்மா சினி ஆர்ட்ஸ் மீது இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமி, நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு போடப்போவதாக மாங்கா தயாரிப்பாளரை அறிக்கை ஒன்றின் மூலம் மிரட்டியுள்ளார். அவர் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
அழகர்சாமி ஆகிய நான், எங்களது சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை விநியோகம் செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் மீது DreamZone Movies, திரு சக்திவேல் அவர்கள் 'மாங்கா' என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை கொடுத்ததாகவும், அதன் மூலம் அவர் நஷ்டம் அடைந்ததாகவும் புகார் கொடுத்துள்ளார்.
திரு சக்திவேல் அவர்களை நாங்கள் நேரடியாக சந்தித்ததும் இல்லை, தொலைபேசி வாயிலாக பேசியதும் இல்லை. 'மாங்கா' என்ற திரைப்படத்தை நங்கள் தமிழ்நாடு முழுவதும் விநியோகமும் செய்யவில்லை.
வேண்டுமென்றே எங்கள் மீதும், எங்கள் நிறுவனத்தின் மீது களங்கம் விளைவித்து, மோசடி செய்யும் நோக்கத்தோடு தவறான புகார் அளித்து வருகிறார்
ஆகையால் அவர் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளோம் என்பதை இதன்மூலம் தெரிவித்து கொள்கிறோம்,
இவ்வாறு அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.