திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (22:34 IST)

'மாயவன்' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் முதல்முதலாக இயக்கிய 'மாயவன்' திரைப்படம் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும் அன்புச்செழியனின் கெடுபிடி காரணமாக ரிலீஸ் ஆகமுடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் அன்புச்செழியன் தரப்பு ரெட் கார்டை தளர்த்திய நிலையில் கடந்த வாரம் இந்த படம் டிசம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது இந்த படம் திட்டமிட்ட தேதியில் இருந்து ஒரு வாரம் அட்வான்ஸாக அதாவது டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டிசம்பர் 7 முதல் என்ற வாசகத்துடன் புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

சந்தீப்கிஷான், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், அக்சரா கெளடா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.