1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (10:58 IST)

வைகாசி விசாகம்; பழனிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்! – ரயில்வே அறிவிப்பு!

பழனியில் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக மதுரை – பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியில் 12ம் தேதியன்று வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பழனி கோவிலுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

இதனால் பயணிகள் வசதிக்காக மதுரை – பழனி இடையே 12ம் தேதியன்று முன்பதிவில்லா ரயில் செயல்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 10.50க்கு புறப்பட்டு மதியம் 1.25மணிக்கு பழனி சென்றடையும், மீண்டும் பழனியில் இருந்து 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரையை சென்றடையும்.

இந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.