ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2024 (17:36 IST)

அண்ணன் வராரு வழிவிடு.! GOAT படத்தின் டிரெய்லர் வெளியானது.!!

Goat Poster
விஜய் நடிப்பில் தயாராகியுள்ள GOAT திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
 
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரஷாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் நடித்துள்ள GOAT படத்தின்  படப்பிடிப்பு பணிகள்  இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் , படத்தின் இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் அடுத்த மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மறைந்த பாடகி பவதாரணியின் குரலில் சின்ன சின்ன என்ற பாடலும், விஜய் அஜ்மல் உள்ளிட்டோர் ஆடியுள்ள விசில்போடு பாடலும்  இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 
 
டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கோட் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்..  கோட் பட டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு கோட் டிரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

 
இந்த டிரெய்லரில் 'அண்ணன் வரார் வழி விடு' உங்கள லீட் பண்ண போறது புது லீடர் என்ற பல்வேறு வசனங்கள் இடம்பெற்றுள்ளது. அதோடு, ’Lion is Always a Lion’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது விஜய் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.