வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (13:32 IST)

சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்

2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
அதன்படி, அமரேஷ் புஜாரி,  முனைவர் அ.அமல்ராஜ், சு.விமலா, ந. நாவுக்கரசன், பா.பிரேம் பிரசாத், வெ.செல்வி, க.சாந்தி, எஸ்.ரவி, க.சாயிலெட்சுமி, ஆ. அமுதா, வே.சந்தானலட்சுமி, சு.சீனிவாசன், மு.கனகசபாபதி, க.ஆடிவேல், ப.ஆனந்தலட்சுமி ஆகியோருக்கு விருதும் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. 
 
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும்  தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், ரூ.25,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள் முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.