1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 26 ஆகஸ்ட் 2020 (20:59 IST)

தந்தை இறந்த நிலையிலும் சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொண்ட காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொண்ட காவல் ஆய்வாளருக்கு பாராட்டு
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நெல்லை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள மகேஸ்வரி என்ற காவல் ஆய்வாளர் தயாராகி வந்த நிலையில் திடீரென அவரது தந்தை சொந்த ஊரில் மரணமடைந்து விட்டதாக தகவல் கிடைத்தது
 
தந்தை இறந்த செய்தி கேட்டும், தந்தையின் இறுதிச் சடங்கு கூட செல்லாமல் அவர் சுதந்திர தின அணிவகுப்பை முடித்து விட்டு அதன் பின்னரே சென்றார். காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் இந்த தேசப்பற்று தலைப்புச் செய்திகளில் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் தந்தை இறந்த நிலையிலும் சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்டு கடமை தவறாமல் பணியாற்றிய காவல் ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நற்சான்று வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவரது தேசப் பற்றையும் அவர் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது