ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (09:28 IST)

வார விடுமுறை: கிளாம்பாக்கத்தில் இருந்து 500+ சிறப்பு பேருந்துகள்! – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

வார இறுதி மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 500+ சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னையில் கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்ட நிலையில் கடந்த வாரத்தில் போதிய அளவு பேருந்துகள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை அதை தொடர்ந்து வரும் முகூர்த்த நாட்கள் காரணமாக ஏராளமான மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால் கிளாம்பாக்கத்திலிருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, ஈரோடு, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, கன்னியாக்குமரி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 750 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதுபோல ஞாயிற்றுக்கிழமை அன்று திரும்ப சென்னை வர பல மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Edit by Prasanth.K