1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By Sasikala

தைத்திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை !!

பொங்கல் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படுகின்றது. 

இதனை உழவர் திருநாள் எனலாம். ஆடி முதல் மார்கழி வரை கழனியில் ஓயாது உழைத்ததால் சோர்வடைந்து விடுவதால், மார்கழியில் அறுவடை காலம் முடிந்து புது நெல் வீடுவந்து சேரும்போது, சோர்வு நீங்கி, மகிழ்வுடன் இருக்கிறோம். ஓய்வு கொள்ளவும், இறைவனை தொழுது அருள் பெறவும், குடும்பத்துடன் குதூகலமாக  இருக்கவும், விவசாய வேலைகள் இல்லாத தை மாதம், முதல் நாள் வசதியான நாள். ஆகவே தான் தை மாதம் முதல் நாள் பொங்கல் விழாவாகக்  கொண்டாடுகிறோம் என்கின்றனர்.
 
இப்பண்டிகையின் ஆன்மீக இரகசியம் என்னவென்றால் முதல் நாள் பழையதை எரித்தல், போகி பண்டிகையாக (தீயதை விலக்கிவிடுதல்) கொண்டாடப்படுகின்றது,  புதியன புகுத்தல் (நற்பண்புகளை நடைமுறையில் கொண்டு வருதல்), இறைவன் அருள் பெறுதல் என்ற தன்மைகளின் அவசியத்தை உணர்த்துவதாக இருக்கின்றது.
 
பெரும் பொங்கல் அல்லது சூரிய பொங்கல் எனப்படும் இரண்டாம் தினத்தன்று முதலில் ஞான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவது ஆகும். அதாவது உழவு செய்ய சூரியன் முழுமையாக உதவுவது போல், நமது துக்கங்களுக்கு காரணமாக இருக்கும் அஞ்ஞான இருளை நீக்கி, அதில் நல்ல எண்ணங்கள் விளைய ஞான  சூரியனான இறைவன் ஞானத்தை தருகின்றார்., இதன் மூலம் சுயம் மற்றும் முழு உலகிற்கும் நன்மை ஏற்படுகின்றது.