செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூன் 2020 (20:39 IST)

10ஆம் வகுப்பு தேர்வு ரத்து: மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15 முதல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று இது குறித்து நடைபெற்ற வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக முன்வைத்தன் காரணமாக இன்று காலை 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார் 
 
மேலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பால் சொந்த ஊர் சென்றிருந்த பலர் வெளியூரில் தங்கி படிக்கும் பள்ளி இருக்கும் ஊருக்கு ஊருக்கு சிறப்பு பேருந்துகள் மூலம் வருகை தந்திருந்தனர். அவர்கள் அங்கு ஹால் டிக்கெட்டை வாங்கிவிட்டு ஹாஸ்டலில் தங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்புப் பேருந்து இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது
 
இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லலாம் என்றும் மீண்டும் பள்ளிகள் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்ட பின் அவர்கள் பள்ளி இருக்கும் ஊருக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது