செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 ஜூன் 2021 (13:57 IST)

ஜூன் 24ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டம்: சபாநாயகர் அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கிய நிலையில் ஜூன் 24 வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவும் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்
 
சபாநாயகர் அப்பாவு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் ஆளுநர் உரை மீதான உறுப்பினர்களின் விவாதம் நடைபெற உள்ளதாகவும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜூன் 24ஆம் தேதி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து 16 வது சட்ட மன்றம் தொடரின் முதல் கூட்டம் 4 நாட்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது