வியாழன், 30 நவம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (13:57 IST)

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு!

புதுவையில் தேர்தல் முடிவடைந்து என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி பொறுப்பை ஏற்ற போதிலும் முதல்வர் தவிர இன்னும் வேறு யாரும் பதவி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சபாநாயகர், துணை முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவிகள் தேவை என்று பாஜக அடம்பிடித்து வருவதால் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டது
 
இதனை அடுத்து சமீபத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி சபாநாயகர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்பட 2 அமைச்சர்கள் பதவி பாஜகவுக்கு அளிக்க என்ஆர் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. இதனை அடுத்து விரைவில் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பாஜக எம்எல்ஏ செல்வம் என்பவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு போட்டியாக யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இன்று அல்லது நாளை பதவியேற்பார் என்றும் அதன்பிறகு எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது