திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 ஜூன் 2021 (13:56 IST)

நடிகர் விவேக் மறைவுக்கு நாளை சட்டமன்றத்தில் இரங்கல்!

சமீபத்தில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக 10 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 16வது சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது என்பதும் இன்று நடைபெற்ற கவர்னர் உரை கூட்டத்தில் கவர்னர் தன்னுடைய உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
திமுக அரசில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் ஆகியவை இன்றைய கவர்னர் உரையில் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன்படி எழுத்தாளர் கி ராஜநாராயணன், நடிகர் விவேக் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் அவர்கள் மறைவிற்கும் நாளை இரங்கல் தெரிவிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.