திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (11:10 IST)

சட்டப்பேரவையில் ஈபிஎஸ் அருகில் ஓபிஎஸ் இருக்கையா? பரபரப்பு தகவல்!

eps ops
சட்டப்பேரவையில் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி அருகில் ஓ பன்னீர்செல்வம் உட்கார்ந்து இருந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் சட்டப்பேரவையில் அவருக்கு இருக்கை எது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
 
சட்டப்பேரவையில் ஓ பன்னீர் செல்வத்தின் இருக்கை குறித்து நாளை சபாநாயகர் அப்பாவு பரிசீலனை செய்ய உள்ளதாகவும் அதிமுகவின் ஆகிய இரு அணிகளும் சபாநாயகரிடம் கடிதம் கடிதம் கொண்டிருக்கும் நிலையில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
ஓபிஎஸ் அதிமுக உறுப்பினர் இல்லை என்பதால் அவரை சுயேட்சை வரிசையில் இணைக்க வேண்டும் என அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்றும் அவர் அதிமுக எம்எல்ஏ தான் என்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது 
 
இது குறித்து நாளை சபாநாயகர் அப்பாவு  உரியஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran