1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2023 (12:55 IST)

திமுகவில் இணைய தயாராக இருந்த 40 அதிமுக எம்எல்ஏக்கள்... அப்பாவு பேச்சால் பரபரப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய தயாராக இருந்தனர் என சபாநாயகர் அப்பாவு நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை அடையாறு பகுதியில் இன்று நடைபெற்ற  நூல் வெளியீட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது  அதிமுக உடைந்து டிடிவி தினகரன் திகார் சிறைக்கு சென்றபோது அதிமுகவில் உள்ள 40 எம்எல்ஏக்கள் உள்பட பலர் திமுகவில் இணைய தயாராக இருந்தனர் என்றும் ஆனால் அவர்களை நம்பி ஆட்சி அமைக்க முடியாது என  மு க ஸ்டாலின் தெரிவித்து மக்களை தேடிச் சென்றார் என்றும் பேசினார். 
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தலைவர்களை கொச்சைப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்பி தயாநிதி மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
 
Edited by Mahendran