திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (12:09 IST)

முன்கூட்டியே சிலை செய்ய ஆர்டர்! – மரணத்தை கணித்தாரா எஸ்பிபி?

இந்திய பின்னணி பாடகரான எஸ்பிபி தான் இறந்து போவதற்கு சில மாதங்கள் முன்பாக தன்னை சிலையாக வடிக்க ஆர்டர் கொடுத்திருந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய சினிமா பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிர் நீத்தார். அவரது உடல் நேற்று முந்தினம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னராக தனது பெற்றோரின் சிலையை வடிக்க கிழக்கு கோதாவரி கொத்தப்பேட்டையை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் என்பவரிடம் ஆர்டர் செய்திருந்துள்ளார் எஸ்பிபி.

இந்நிலையில் தான் கொரோனா பாதிக்கப்படுவதற்கு முன்னதாக சிற்பி ராஜ்குமாரை தொடர்புகொண்ட எஸ்பிபி தன்னையும் சிலையாக வடிக்க வேண்டும் என ஆர்டர் செய்துள்ளார். அதற்கான புகைப்படங்களையும் மெயிலில் அனுப்பியுள்ளார். சிலையும் முழுவதுமாக செய்து முடித்துவிட்ட நிலையில் எஸ்பிபி உடல்நல குறைவால் உயிரிழந்ததாக சிற்பி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

திடீரென எஸ்பிபி தனக்கு சிலை செய்ய சொன்னது ஏன்? அவரது மரணம் குறித்து முன்னரே அவர் கணித்திருந்தாரா என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் கேள்விகள் உலா வரத் தொடங்கியுள்ளன.