1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (11:47 IST)

இதுக்கு தான் இவ்ளோவ் பில்டப்பா...? சீரியலில் களமிறங்கிய இனியா!

வாகை சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை இனியா. தனது எல்லா படங்களிலும் ஹோம்லியாக நடித்து வந்த அவருக்கு பாராட்டுகள் கிடைத்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.

இதனால் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே காணாமல் போனார் இனியா. ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த இனியா சமீப நாட்களாக சமூகவலைத்தளத்தில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சியில் கண்ணை மறைகிறார்.

அவ்வப்போது வெறித்தமனாக ஒர்க் அவுட் செய்த புகைப்படங்களை வெளியிட்டு வந்த இனியா எதாவது படவாய்ப்புக்கு சான்ஸ் தேடுறார் போல என நினைத்திருந்தவேளையில் செம ஷாக்கிங் தகவல் ஒன்று கிடைத்துள்ளதுள்ளது. ஆம், படவாய்ப்புகள் இல்லாததால் அம்மணி "கண்ணான கண்ணே" சீரியலில் வில்லியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.